Showing posts with label அகதி. Show all posts

நாட்டைத் துண்டாடவோ, பிளவுபடுத்தவோ ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது

நாட்டைத் துண்டாடும் அல்லது பிளவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சிலரால் குற்றஞ்சாட்டப்பட்ட போதிலும் நாட்டை துண்டாடவோ அல்லது பிளவுபடுத்தவோ தான் ஒருபோதும் தயாராக இல்லை என்பதுடன் எவருக்கும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடவும் இடமளிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவை செவனபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொய்ப் பிரசாரங்களிலும் சந்தர்ப்பவாத அரசியல் தந்திரோபாயங்களிலும் இன்று நாட்டு மக்கள் சிக்கிக்கொள்ள மாட்டார்கள் என்பதுடன் நாடு பயணிக்கும் பாதையை அவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று நாட்டிற்கு தேவையாக இருப்பது மன்னராட்சி முறையன்றி மக்களாட்சி முறையே ஆகும் என்பதுடன் இதனையே மக்களும் எதிர்பார்க்கின்றனர் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அத்தகையதொரு அரசியல் மற்றும் சமூக மாற்றத்தினை நாட்டில் ஏற்படுத்தவே கடந்த மூன்று வருட காலமாக தாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஊழல் அரசியல்வாதிகள் இன்று ஒரே குழுவாக இணைந்திருக்கின்றனர் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுடன், அவர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்காகவோ அல்லது நாட்டை அபிவிருத்தி செய்வதற்காகவோ அன்றி தமது தனிப்பட்ட அபிவிருத்திக்காகவே அதிகாரத்தைக் கேட்கின்றனர் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும், அதிகார துஷ்பிரயோகங்களைச் செய்து அரச வளங்களை அழிவடையச் செய்யும் அரசியல்வாதிக்கு எதிராக கடந்த ஆட்சி காலத்தில் எதுவித நடவடிக்கைகளும் அப்போதைய தலைவர்களால் மேற்கொள்ளப்படாததுடன், அவற்றைப் பற்றி உரையாட கூட அவர்கள் விரும்பவில்லை என்பதனால் கடந்த ஆட்சிக்காலத்தில் ஊழல், மோசடிகள் அதிகரித்திருந்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் என்றவகையில் தான் மத்திய வங்கி தலைமையகத்தில் இடம்பெற்ற அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளைப் பற்றிய கலந்துரையாடலில் பங்குகொண்டபோது அரசாங்கத்தின் ஊழல், மோசடிகள் தொடர்பாக உரையாடியமையினால், மறுநாள் காலை அலரிமாளிகைக்கு தன்னை அழைத்த முன்னாள் தலைவர் அரசாங்கத்தின் அமைச்சர் என்றவகையிலும் கட்சியின் பொதுச்செயலாளர் என்றவகையிலும் அரசாங்கத்தின் ஊழல், மோசடிகள் தொடர்பாக பேசக்கூடாது எனவும் வேறு பயணமொன்றை மேற்கொள்ள தயாராகின்றீர்களா என தம்மிடம் கேட்டதாகவும் இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி, ஊழல், மோசடிகளுக்கு எதிராகச் செயற்படுவது மாத்திரமன்றி அது தொடர்பாக பேசக்கூட முடியாது எனில் மக்களின் நன்மைக்காக தனியானதொரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என தான் அன்று உறுதியாக தீர்மானித்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.ஊழல், மோசடிகளுக்கு எதிராகச் செயற்படுகையில் கட்சி, நிறம், பதவி, உறவுகள் மற்றும் நட்பு என்ற எந்தவொரு விடயத்தையும் கருத்திற்கொள்ளாததுடன், இன்று நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது தமது சகோதரர்களுக்கும் அவ்விதமே நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை தான் செயலில் தற்போது காட்டியுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் திம்புலாகல பிரதேச சபைக்கு போட்டியிடும் அபேட்சகர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரதேசத்தின் மகாசங்கத்தினர் உள்ளிட்ட சர்வ மத தலைவர்கள், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரட்ன, என்.பி.சமந்த உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகள் பலரும் இந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதனிடையே பொலன்னறுவை கலஹகல ஸ்ரீதர்மராஜ விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு தொகுதி இன்று முற்பகல் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.

“கருணை ஆட்சி – நிலையான நாடு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள அனைவருக்கும் ஆரோக்கியமான அளித்து, நோயற்ற சமூகத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடன் சிறுநீரக நோய் நிவாரண தேசிய செயற்திட்டம் மற்றும் ஜப்பான் கூட்டமைப்பின் பிரதான நிறைவேற்றதிகாரி கலாநிதி மிட்சுகி சுகியின் அன்பளிப்பில் இந்த நீர் சுத்திகரிப்புத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

”எழுச்சி பெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் கலஹகல ஸ்ரீ தர்மராஜ விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய அறநெறி பாடசாலைக் கட்டிடமும் இதன்போது ஜனாதிபதியால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.விகாராதிபதி பொலன்னறுவை பிரதேச பிரதான சங்க நாயக்கர் குருவாஓயே தம்மசித்தி நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரால் பிரித் பாராயணம் செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு இதன்போது ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரட்னவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

அதன்பின்னர் பொலன்னறுவை திம்புலாகல பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் அபேட்சகர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்புக்கள் பலவற்றிலும் இன்று ஜனாதிபதி பங்குபற்றினார்.

முதலாவதாக திம்புலாகல, கல்தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

அதன்பின்னர் யாய 08 அரச மரத்தருகே இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

ஜனாதிபதி, 1989 ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், பொலன்னறுவை மக்களுக்காக மேற்கொண்ட முதலாவது அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாய 08 பாலத்தின் அருகே இடம்பெற்ற இந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதிக்கு பிரதேச மக்களால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பின்னர் யாய 05 ஸ்ரீ விசுத்தாராம விகாரைக்கு அருகே இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

அரலகங்வில மற்றும் விஜயபாபுர வட்டாரங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்பின்னர் அரலகங்வில, அரசமர சந்தியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தம்மால் ஆரம்பிக்கப்பட்ட பொலன்னறுவை மாவட்டத்தின் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மிகுந்த வினைத்திறனுடனும் துரிதமாகவும் இடம்பெற்று வருவதாக வலியுறுத்தினார்.

ஊழல், மோசடி மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக செயற்பட்ட உலக தலைவர்களுடன் அந்நாட்டு மக்களும் இணைந்து கொண்டுள்ளதைப் போல தாமும் மக்களுடன் இணைந்து ஊழல், மோசடி மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்லவுள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.

வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரட்ன உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகள் பலரும் இந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு சென்ற யூதர்கள் சந்திக்கும் போராட்டம் என்ன?

"நான் இந்தியாவில் இருந்து வெளியேறி இஸ்ரேலில் குடியேற முடிவு செய்தபோது எனக்கு18 வயது. அது ஒரு எளிமையான முடிவு அல்ல" என்கிறார் தற்போது இஸ்ரேலில் வசிக்கும் மராத்தி மொழி பேசும் யூதரான ஷெர்லி பால்கர்.
"நான் பல பிரச்சனைகளை சந்தித்தேன். ஆனால் எப்படியோ நான் அந்த கஷ்டங்களை எல்லாம் கடந்து தற்போது இஸ்ரேலில் வாழ்ந்து வருகிறேன். இப்போது இது என்னுடைய நாடு. ஆனால், இந்தியாவுடனான எனது பாசத்தை இதனோடு ஒப்பிட முடியாது. "
மும்பைக்கு அருகே உள்ள தானேவின் ஸ்ரீராங் சொசைட்டியில் ஷெர்லி வாழ்ந்து வந்தார்.
20 வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேலில் குடியேறினார். இப்போது இஸ்ரேலில் உள்ள நகரங்களில் ஒன்றான கெதராவில் அவர் வாழ்ந்து வருகிறார். அவர் கல்வித் துறையின் அலுவலக மேலாளராக பணிபுரிகிறார்.இஸ்ரேலில் குடியேறுவதற்கு முன்பு, நான் இங்கு சுற்றுப்பயணத்திற்காக வந்தேன். என்னுடைய பல உறவினர்கள் இங்கு வசித்து வருகிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு வந்தபோது, இந்த நாட்டை வாய்ப்புகள் குவிந்துள்ள இடமாக பார்த்தேன். எனவே இங்கேயே குடியேற முடிவு செய்தேன்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.ஒரு நாட்டை சுற்றுலா பயணியாக பார்வையிடுவதற்கும், அந்நாட்டின் குடிமகனாக மாறுவதற்கும் அதிகளவிலான வித்தியாசம் உள்ளது. அதற்கான வேறுபாட்டை விரைவிலேயே உணர்ந்தார் ஷெர்லி.
"மிகப்பெரிய சவாலே பேசும் மொழிதான். நாங்கள் யூதர்களாக இருந்தாலும், மற்ற இந்தியர்களை போன்று மராத்தி, ஹிந்தி அல்லது ஆங்கிலம் போன்ற மொழிகளையே பேசுகிறோம். ஆனால் இங்கே இஸ்ரேலில், ஹீப்ரு கட்டாயமாகும். உங்களுக்கு ஹீப்ரு தெரியாவிட்டால் நீங்கள் முற்றிலும் முடங்கி விடுவீர்கள்" என்று ஷெர்லி கூறுகிறார்.
"எனவே, நான் அரசு நிதியில் செயல்படும் அடிப்படை ஹீப்ரு கற்றல் திட்டமொன்றில் சேர்ந்து கொண்டேன். அதன் பிறகு என் சொந்த பணத்தை செலவிட்டு, ஹீப்ரு மொழியை கற்றுக்கொண்டேன். ஒரு இஸ்ரேலிய குடிமகனாக ஆவதற்குரிய போதுமான தகுதியை பெற்றேன்" என்று தனது தொடக்ககால சிரமங்களை நினைவுக் கூறுகிறார்.
மொழி மட்டுமல்லாது, சவால்கள் அனைத்து முனைகளிலும் இருந்தன. உணவு, உடை, பழக்கவழக்கம் மற்றும் மரபுகள்... என நீங்கள் எந்தவொரு காரியத்தை குறிப்பிட்டாலும் அது சவாலான விடயமாகவே இருந்தது. ஆனால் பெனி இஸ்ரேலியர்களை (இந்திய யூதர்களை குறிப்பிட பயன்படுத்தப்படும் வார்த்தை) போலவே, அந்த சவால்களை சமாளிக்க கற்றுக்கொண்டார். ஆனால், இஸ்ரேலில் உள்ள யூதர்கள் பின்பற்றும் பாரம்பரியத்தை பழக்கப்படுத்தி கொள்வதே சிறந்த வழியாகும்.
"நாங்கள் இன்னும் எங்களது பாரம்பரியங்களை பராமரித்து வருகிறோம். பெனி இஸ்ரேலியர்களின் தனித்துவமான மரபுகளை நாங்கள் தொடர்ந்து பின்பற்றுகிறோம் " என்று கூறி பெருமிதமடைகிறார் ஷெர்லி."கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் யூதர்கள் தரம் தாழ்ந்தவர்களாக கருதப்பட்டார்கள். பல நாடுகளில் அவர்கள் கொடுமைகளை எதிர்கொண்டனர். இதன் காரணமாக பெரும்பாலான இஸ்ரேலியர்கள் தங்களது நாடுகளை மறக்க விரும்புகிறார்கள். மேலும், அவர்கள் தாங்கள் புலம்பெயர்ந்து வந்த நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை கொண்டிருப்பதை விரும்பவில்லை."
"ஆனால், பெனி இஸ்ரேலியர்களான நாங்கள் அதில் மாறுபட்டவர்கள். இந்தியா எங்களை மரியாதையுடனும், அன்புடனும் உபசரித்தது. நாங்களும் அதே உணர்வை திரும்ப அளிக்கிறோம்" என்று தான் இந்தியா மீது கொண்டுள்ள ஆழ்ந்த அன்பை ஷெர்லி வெளிப்படுத்துகிறார்.ஷெர்லி பால்கர் மட்டும்தான் இஸ்ரேலில் குடியேறிய மராத்தி மொழி பேசும் பெனி இஸ்ரேலிய யூதர் அல்ல. மராத்தி கற்றல் திட்டத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேலுக்கு சென்றிருந்தார் பேராசிரியர் விஜய் தபாஸ். இவரது பயணமே 1948ம் ஆண்டு உருவான இந்த யூத தேசத்திற்கு மராத்திய யூதர்கள் தங்களது "நம்பிக்கையளிக்கும் நாட்டிற்கு" புலம்பெயரத் தொடங்கிய வரலாறு குறித்து தெரிய வருகிறது. பீர்ஷெவா, அஷ்டோட் அஷ்கலோன், லோட், ராம்லே, எருஹம், டிமோனோ, ஹைபா போன்ற இஸ்ரேலிய நகரங்களில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பெனி இஸ்ரேலியர்கள் குடியேறியுள்ளனர்.ஆனால், இது பெனி இஸ்ரேலியர்களின் முதல் குடிபெயர்வு இல்லை. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்கள் குடிபெயர்ந்துள்ளனர். அந்நேரத்தில் அது தலைகீழ் இடம்பெயர்வாக இருந்தது. அதாவது, இஸ்ரேலிலிருந்து மகாராஷ்டிராவுக்கு!
இன்றைய மகாராஷ்டிரத்தின் ராய்காட் மாவட்டத்திற்கு அருகே இந்தியாவின் மேற்கு கரையோரத்தில் இஸ்ரேலில் துன்புறுத்தலுக்குள்ளான யூத குடும்பங்களைச் சுமந்து வந்த கப்பல் உடைந்தது. அவ்விபத்தில் 7 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் தவிர மற்ற அனைவரும் இறந்துவிட்டனர். அவர்கள் நவ்கோனை என்ற கிராமத்தின் கரையை வந்தடைந்தார்கள்.
அவர்கள் தங்களது அன்புக்குரியவர்களை அதே கிராமத்தில் அடக்கம் செய்தார்கள். இதுதான் இந்தியாவில் யூதர்களின் முதல் மயான இடமாகும்.
ராய்காட் மாவட்டத்திலுள்ள உள்ளூர் மக்களின் ஆர்வத்தை உயர்த்துவதற்கு இவர்களின் மொழியும், அசாதாரண பழக்கங்களும் போதுமானதாக இருந்தது.இவர்கள் அவ்விடத்தை வந்தடைந்தபோது "நாங்கள் பெனி இஸ்ரேலியர்கள்" என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.
"ஹீப்ரு மொழியில் பெனி என்றால் மகன் என்று அர்த்தம். எனவே, இந்த சமூகம் தங்களை தாங்களே 'இஸ்ரேலின் மகன்கள்' என்று அழைத்துக் கொண்டது" என்கிறார் ருயா கல்லூரியின் வரலாறுத்துறை பேராசிரியரான மொஹசினா முகடம்.
கொங்கன் பகுதியில், பெனி இஸ்ரேலியர்கள் ஷான்வர் டெலிஸ் என்று அழைக்கப்படுகின்றனர். ஆங்கிலத்தில் 'ஷானிவார்' என்றால் 'சனிக்கிழமை' என்றும் தெலி என்பது எண்ணெய் பிரித்தெடுக்கும் பணியை மேற்கொள்பவர்களையும் குறிக்கும்.
மகாராஷ்டிராவின் யூத சமூகத்தை சேர்ந்தவர்கள் (பெனி இஸ்ரேல்) ஷானிவர் டெலிஸ் என்று அறியப்படுகின்றனர். யூதர்களின் வழக்கத்தின்படி வாரத்தின் ஏழாவது நாளாக சனிக்கிழமையை கருதி அதை ஷப்பாட் என்று அழைப்பதுடன் அன்று பணிபுரிவதை தவிர்க்கின்றனர்.பெனி இஸ்ரேலியர்கள், இந்திய மண்ணில் தங்கள் கால்களை வைக்கும் முன் அவர்கள் எதிர்கொண்ட நிலைமையைக் கருத்திற்கொள்ளும்போது, அவர்களின் புனித நூல்களால் கட்டுப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சர்யம் அளிப்பதாக இல்லை. எனவே அவர்கள் நீண்ட காலமாக மத நூல்களுடன் எவ்வித தொடர்பையும் கொள்ளவில்லை. யூத பாரம்பரியங்களை தங்களது மனதில் நிலை நிறுத்தியவர்கள் அதை பின்தொடர்ந்தார்கள்.
பிரிட்டிஷ் தலைமையிலான ஆட்சிக் காலத்தின்போது, கொங்கன் பகுதியிலிருந்து பல பெனி இஸ்ரேலியர்கள் மும்பைக்கு வந்தனர். 1948ல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது, உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த யூதர்கள் தங்களின் 'நம்பிக்கையளிக்கும் தேசத்திற்கு' திரும்பி வரும்படி முறையீடு செய்யப்பட்டது. இந்த அழைப்பை ஏற்ற பல பெனி இஸ்ரேலியர்கள் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தனர்.
ஆனால், இஸ்ரேலில் குடியேறிய பின்னரும் கூட, அவர்கள் தங்களின் மகாராஷ்டிர கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள்.
இரண்டு கலாச்சாரங்களின் கலப்பு
"முந்தைய பெனி இஸ்ரேலியர்கள் முற்றிலும் வேறுபட்ட மக்களாக காணப்படவில்லை. ஆனால், இந்தியாவிற்கு வந்த பிரிட்டிஷ்காரர்கள் இந்த மக்களின் சில அசாதாரண பாரம்பரியங்களை உற்றுநோக்கினர். யூதர்கள் மீன்களை செதில்களோடு மட்டுமே சாப்பிடுகிறார்கள். அவர்கள் சனிக்கிழமைகளில் வேலை செய்யவில்லை. அவர்களின் சமையல் முறை வேறுபட்டது. விலங்குகளை கொல்லும் முறை கூட தனித்துவமானது. இவற்றையெல்லாம் கவனித்த பிரிட்டிஷ்காரர்கள் இம்மக்கள் யூதர்கள் என்று உணர்ந்து கொண்டனர்" என்கிறார் மொஹசினா முகடம்.
"பிரிட்டிஷ் சகாப்தத்தில் பெனி இஸ்ரேலியர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அவர்கள் இராணுவம், ரயில்வே, மருத்துவ சேவைகள் மற்றும் கல்வித் துறையில் பணியாற்றினர்" என்று புனேவில் உள்ள பெனி இஸ்ரேலியரான சாமுவேல் ரோஹெர்கார் கூறுகிறார்.
"அவர்கள் மும்பைக்கு வந்தபோது, இன்றைய மஸ்ஜித் நிலையத்திற்கு அருகே ஒரு யூத வழிபாட்டு தலத்தை கட்டினார்கள்" என்கிறார் சாமுவேல்.
"யூத வழிபாட்டு தலத்தில் எந்த சிலையையும் உங்களால் காண முடியாது. எங்கள் புனித நூல்களை ஒரு அலமாரியில் வைத்திருக்கிறோம். அந்த அலமாரியானது மேற்குப்புறத்தில் வைக்கப்படும். ஹீப்ருவில் இந்த புத்தகங்களை 'செபர் டோரா' என்று அழைத்தார்கள். ஒரு மாதத்திற்கு ஒருமுறை, சனிக்கிழமையன்று புனித நூல்களை அவர்கள் ஓதினார்கள்" என்று சாமுவேல் கூறுகிறார்.
மாலிடாபெனி இஸ்ரேலியர்கள் பல இந்து மரபுகளை ஏற்றுக்கொண்டு பின்பற்றினர். உதாரணமாக, திருமண சடங்குகள் அல்லது வளையல்கள் போன்றவை இந்து மரபுகளிலிருந்து எடுக்கப்பட்டன.
யூதர்களின் திருமண விழாக்களில் வழங்கப்படும் திராட்சை மதுவுக்கு சிறப்பிடம் உண்டு. அவர்கள் இந்த மதுவை கிதுஷ் என்று அழைக்கிறார்கள். யூதர்களின் கொண்டாட்டங்களில் கிதுஷுக்கு சிறப்பிடம் இருக்கிறது. திருமண விழாவில் கிதுஷ் முக்கிய பங்கு வகிக்கிறது.
"பெனி இஸ்ரேலியர்களது சிறப்பு பண்டிகை உணவாக 'மாலிடா' என்பது உள்ளது. இது மராத்திய இந்து மதத்தின் பாரம்பரியமான 'சத்யநாராயண்' போன்ற செயற்பாட்டை கொண்டது. இது ஒவ்வொரு சுப நிகழ்ச்சிக்கும் செய்யப்படுகிறது."பெனி இஸ்ரேலியர்களுக்கும் மற்ற யூதர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ஷெர்லி அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். "மற்ற நாடுகளில் யூதர்கள் அட்டூழியங்களுக்கு உள்ளானார்கள். எனவே, அவர்கள் உள்ளூர் மக்களுடன் இணையவில்லை. இந்தியாவை பொறுத்தவரை அது வேறுபட்ட பின்புலத்தை கொண்டது. இந்தியர்கள் எங்களுக்கு மரியாதையுடனும் மற்றும் கண்ணியத்துடன் நடத்தினார்கள். எனவே, நாங்கள் மற்ற இந்திய சமூகங்களோடு இணைந்தோம். அதன் காரணமாக மற்ற சமூகத்தினரின் மரபு சார்ந்த பழக்கவழக்கங்கள் எங்களுடையதானது" என்று ஷெர்லி பால்கர் கூறுகிறார்.
மராத்தி மொழியை கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள்
முதன் முதலில் இஸ்ரேலுக்கு சென்ற பெனி இஸ்ரேலியர்கள் மராத்தி மொழியை நன்றாக பேசக்கூடியவர்கள். ஆனால், அவர்களது புதிய தலைமுறை மராத்தி மொழியை நன்றாக பேசுவதில்லை. எனவே, பெனி இஸ்ரேலிய சமூகத்தினர் மராத்தி கற்றல் படிப்புகளை துவங்கினர்.
இதன் ஒரு பகுதியாக, பேராசிரியர் விஜய் தபாஸ் மும்பையில் இருந்து இஸ்ரேலுக்கு சென்றார். "பெனி இஸ்ரேலியர்களுக்கு மராத்தி மீது பெரும் மரியாதை உண்டு. அவர்கள் மொழியைக் கற்றுக்கொள்ள பெரும் ஆர்வம் உள்ளவர்கள். அவர்கள் இந்தியாவுடன் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளனர். இந்தியாவில் உள்ள பல யூத வழிபாட்டுத் தலங்களுக்கு இம்மக்களால் நிதியளிக்கப்படுகிறது" என்று அவர் கூறுகிறார்.பல ஆண்டுகளாக இஸ்ரேலில் தங்கிய பின்னரும் கூட, பெனி இஸ்ரேலியர்களுக்கு இந்தியா குறித்து தங்கள் மனதில் சிறப்பிடம் உண்டு. "எங்கள் இதயத்தின் தனியிடத்தில் இந்தியா உள்ளது. நாங்கள் இன்னும் அங்கே போகிறோம். சமீப காலம் முன்னர்வரை என் பெற்றோர் தானேயில் இருந்தார்கள். என் சகோதரி மும்பையில் இருக்கிறார். நான் மும்பைக்கு செல்லும் போதெல்லாம், 'சாப்பிட வேண்டிய' உணவு வகைகள் குறித்த பட்டியலை தயார் செய்கிறேன். வாடா-பாவ் மற்றும் சாட் பொருட்களை நான் விரும்புகிறேன்" என்று ஷெர்லி கூறுகிறார்.
அவளுடைய பெற்றோர் சமீபத்தில் இஸ்ரேலுக்கு சென்றனர். ஆனால், அங்குள்ள மாற்றத்தை சமாளிக்கப்பதற்கு அவர்களுக்கு கடினமாக உள்ளது.
அவருடைய மகள் இஸ்ரேலில் பிறந்தாள். அவரால் மராத்தி மொழியை பேச முடியும். ஆனால், இனி எப்போதுமே இந்தியாவில் இருப்பதற்கு அவர் விரும்பவில்லை.
டிரம்ப்பின் அறிவிப்பு குறித்து
"ஜெருசலேம் பற்றிய அமெரிக்காவின் அறிவிப்புக்குப் பிறகு இஸ்ரேலில் உள்ள மராத்திய யூதர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கு முன்னரும், இப்போதும் ஜெருசலேமே இஸ்ரேலின் தலைநகரம் ஆகும். ஆனால், அமெரிக்காவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து விடயங்கள் விரைவாக மாற்றப் போகின்றன. ஜெருசலேம் மிகவும் கடினமான நேரத்தை எதிர்கொள்ள போகிறது, அதற்காக நான் கவலைப்படுகிறேன்" என்று ஷெர்லி கூறுகிறார்.
"அதிபர் டிரம்பின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். ஜெருசலேமில் நிலைமை எப்போதும் பதட்டமாக இருக்கிறது. மேலும், சமீபத்திய நிகழ்வுகள் வன்முறையை தூண்டலாம். ஆனால் நாங்களும், எங்களது இராணுவமும் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். இந்தியா அமெரிக்காவைப் பின்பற்றி ஜெருசலேமில் தனது தூதரகத்தை திறக்க வேண்டும்" என்கிறார் ஜெருசலேம் நகரத்தை சேர்ந்த மராத்தி யூதரான நோவா மசில்.

மசூதியை குறிவைத்து தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல், 184 பேர் பரிதாப பலி

எகிப்து நாட்டின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள அல் ராவ்தா மசூதி அருகே இன்று வாகனத்தில் வந்த 4 தீவிரவாதிகள் சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்க வைத்தனர். மேலும், துப்பாக்கி மூலம் மசூதிக்கு வெளியே இருந்தவர்களை குறிவைத்து சரமாரியாக தாக்குதல்களை நடத்தினர்.

இந்த கோர தாக்குதலில் 184 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிராத்தனைக்காக மசூதிக்கு வந்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

இதனையடுத்து, எகிப்து பிரதமர் அப்துல் பாத்தா பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசணை கூட்டத்தை நடத்தியுள்ளதாகவும் ஏ.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.




இரண்டாம் இணைப்பு..


கெய்ரோ: எகிப்தில் மசூதி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 235 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் எல் ஐரிஸ் என்ற நகரின் தலைநகரில் அல் ரவாடா பகுதியில் பிரசித்தி பெற்ற மசூதி உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது துப்பாக்கியுடன் புகுந்த மர்மநபர் சரமாரியாக சுட்டான். அந்த மசூதி மீது பயங்கர குண்டு வெடிப்பு தாக்குதலும் நடந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 235 பேர் உடல் சிதறி பலியாகினர். 100-க்குமு் மேற்பட்டேர் காயமடைந்தனர்.


எகிப்து வரலாற்றில் இதுவரை நடந்த பயங்கரவாத தாக்குதலில் இது தான் மிகப்பெரிய தாக்குதல் என அந்நாட்டு டி.வி.சானல்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.


தாக்குதல் சம்பவத்தையடுத்து அந்நாட்டு அதிபர் அப்துல் பதா அல் சிசி, உயரதிகாரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார். தாக்குதலுக்கு பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மூன்றுநாள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளதாவும், விமான நிலையங்கள், மக்கள் கூடும் வழிபாட்டு தலைங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..

தமிழ்ச் சமூகத்தின் தாயகத்தில் நீதியும் ஆற்றுதலும் கிடைக்க வேண்டும் என்பதற்கான தேடல்: – ஜோன் ரொறி

ரொறொன்ரோ மேயர் ஜோன்ரோறி அவர்கள் கடந்த மார்ச் மாதம் நடுப்பகுதியிலே இலங்கையின் வடமாகாணத்திற்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார். அங்கு சென்ற மேயர் ரொறன்ரோ நகரத்திலுள்ள தமிழ்ச் சமூகம் எங்கேயிருந்து வந்தார்கள்? ஏன் நாட்டைவிட்டு வெளியேறினார்கள்? என்ற விபரங்களைத் தெரிந்து கொள்வதுடன் இலங்கையில்; நீதிக்கும் அமைதிக்குமான வழிவகைகள் எவ்வாறு உள்ளன என்பது பற்றியும் அறிந்து கொள்வதிலும் ஆர்வமாக இருந்தார்.

இப்பயணம் தொடர்பாக மேயர் ஜோன்ரோறி அவர்கள் எழுதிய அனுபவப் பகிர்வின் தமிழாக்கத்தை இங்கு தருகின்றோம்: “ரொறொன்ரோவில் வாழுகின்ற தமிழ்ச்சமூகத்தினரை நன்கு தெரிந்தவர்கள் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்திருப்பர். தமிழர்கள் தொழில் முனைப்புக் கொண்டு வெற்றிகரகமாகச் செயற்படுபவர்கள்> நல்ல குடிமக்கள்> சிறந்த அயலவர்கள்> நல்ல நண்பர்கள் என்பதைப் பலரும் அறிவார்கள். தமிழர்களுடைய தாய்நாட்டைப் பற்றி உங்களுக்குப் பெருமளவில் தெரியாமல் இருக்கலாம்> இலங்கையில் இருந்து வந்த தமிழர்களே பெரும்பாலும் ரொறன்ரோவில் வசிக்கிறார்கள்.

இலங்கையிலே நடைபெற்ற நீண்ட துன்பியலான உள்நாட்டு யுத்தத்திலிருந்து தப்பித்துக்கொள்ள அல்லது அதிலிருந்து விலகிக்கொள்வதற்காக நாட்டைவிட்டு இங்கு வந்தவர்களே இத்தமிழர்கள். இந்த யுத்தமானது பல தசாப்தங்களாக நடைபெற்ற பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒன்றாகும். இத்தகைய சூழலிற்தான் அண்மையிலே நான் ரொறொன்ரோ நகரத்தின் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்க் கனடியரான நீதன் சண்> மைக்கல் தொம்சன் ஆகிய நகரசபை உறுப்பினர்களுடன் சிறிலங்காவிற்குச் சென்றிருந்தேன்.

பத்து வருடங்களுக்கு முன்பு நான் சிறிலங்காவிற்குச் சென்றிருந்தேன். ஆனால் அந்த அழகான நாட்டின் வடபகுதிக்குச் செல்வதற்கு என்னால் முடியவில்லை. அந்த நேரத்தில் அங்கு போர் நடைபெற்றுக்கொண்டிருந்ததனால் என் வடபகுதிக்கான பயணம் தடைசெய்யப்பட்டது.

யுத்தச் செயற்பாடுகள் சில வருடங்களிற்கு முன்னர் முடிவுற்றிருக்கும் நிலையில் நான் வடபகுதியில் உள்ள யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள சமூகங்களையும் சந்தித்து தமிழ் மக்களுக்கான நீதியும் மன ஆற்றுகையும் அடையப்பெறுவதற்காக என்ன விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்ற விபரமான விளக்கத்துடன் திரும்பி வந்துள்ளேன்.

வடபகுதிக்குச் செல்லும்போது உங்களுக்குத் தென்படக்கூடிய முதலாவது விடயம் யாதெனில் மிகையாகக் காணப்படுகின்ற இராணுவத்தின் பிரசன்னமே.

ஒரு சனநாயக நாட்டில் மக்கள் வாழும் பகுதியில் எதிர்பார்பதைவிட பெருமளவில் இராணுவமயமாக்கப்பட்ட தன்மையே அங்கு காணப்படுகின்றது. பெருமளவு இராணுவத்தளங்கள் குறிப்பிட்ட மைற்கற்களுக்கிடையே அமைக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மூன்று தமிழ் குடிமக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்ற அடிப்படையில் அங்கே இராணுவப்படை இருப்பதாகவும் தமிழ் மக்களிடமிருந்து வற்புறுத்திப் பறிக்கப்பட்ட நிலங்களில்தான் இப்படைகள் குடிகொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

மக்களுக்குச் சொந்தமான நிலங்களை தமது தேவைகளுக்காக இராணுவம் பயன்படுத்துவதும் மக்கள் மூச்சுவிடத் திணறுகின்ற அளவுக்கு இராணுவத்தின் நடமாட்டமும் இணைந்ததான இந்தச் செயற்பாடே இலங்கையின் வடபகுதியில் உள்ள மக்களின் நிம்மதி மிக்க வாழ்வுக்கு பலத்த அச்சுறுத்தலாக இருக்கின்றது.

நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது தமிழர் பறிகொடுத்த தமது உறவுகளை நினைவு கொள்வதற்கு எந்தவிதமான நினைவுச்சிலைகளோ நினைவிடமோ வடமாகாணத்தில் இல்லை. இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற இடமான முள்ளிவாய்க்காலிலே தமிழர் ஒரு தற்காலிக நினைவுச்சின்னத்தை ஏற்படுத்தி உள்ளனர். இறுதிக்கட்டதின் போது நாற்பதினாயிரம் (40>000) உயிர்கள் இழக்கப்பட்டதாக ஐக்கியநாடுகள் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இந்த நினைவிடத்திலே ஒரு சுடரை ஏற்றி மலர்கள் இட்டு ஒரு கணம் அந்த நினைவை மீட்டியது என் மனதை நெகிழச் செய்வதாக இருந்தது.

நான் அங்கிருந்த வேளையில் அமைதியான வழியில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அதில் குறிப்பிட்ட ஒரு எதிர்ப்புப்பேரணியிலே நடுத்தர வயதுள்ள பெண்கள் ஒரு குழுவாகக் காணப்பட்டனர். அவர்கள் இளம் ஆண்களின் படங்களைத் தாங்கிய வண்ணம் சோகம் நிறைந்திருந்தனர். அது எனது மனதை மிகவும் தொட்டதாக இருந்தது.

இந்தப்படங்கள் அவர்களின் மகன்மார் பேரன்மார்களுடையது என்பதனை நான் அவர்களுடன் பேசியபோது உணர்ந்துகொண்டேன். அவர்கள் கடைசிக் கட்டப்போரின்போது பிடித்துச் செல்லப்பட்டதாகப் பலருக்கும் தெரியவந்துள்ளது. ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை காணாமல் போன இந்த ஆண்கள் பற்றி ஏதாவது செய்தி கேள்விப்பட்டதாகவோ அல்லது அவர்களைக் கண்டதாகவோ இதுவரை எதுவும் இல்லை.

இதைச் சிந்தித்துப் பாருங்கள். உங்களது பிள்ளைகள் சில வருடங்களுக்கு முன்பு சுற்றிவளைக்கப்பட்டுக் கொண்டு செல்லப்பட்ட பின்பு  இப்பிள்ளைகளின் கதி என்னவாயிற்று என்பது பற்றி ஏதும் அறிய முடியவில்லை என்றால் எத்தகைய துயரம் எமக்குண்டாகும்?

இது தொடர்பாக அண்மையில் அரசாங்கம் சில முயற்சிகளை எடுத்திருந்தும் எல்லாமே பெருமளவில் மூடி மறைக்கப்படும் மர்மமாகவே தொடர்ந்தும் காணப்படுகிறது. தங்கள் பிள்ளைகளின் நிலை குறித்து தங்களை விட அரசாங்கத்திற்கு அதிகம் தெரிந்திருக்கக்கூடிய நிலையில் இருக்கும் தாய்மார்களை அவர்களின் நிலையிலிருந்து எண்ணிப்பாருங்கள். ஒரு தாத்தாவாக, அப்பாவாக என்னை உணர்ந்து அவர்களின் வேதனையைக் அந்தக் கண்களில் கண்டேன். அவர்களின் துயரத்தை ஆழமாக விளங்கிக்கொண்டேன்.

செய்திகள் கெட்டவையாக இருப்பினும் கூட  மனம் புண்பட்டிருக்கும் இந்தத் தாய்மாருக்கும் ஒரு முடிவு தேவை. இதனைப் பகிரங்கப்படுத்த வேண்டும். இந்தக் காணாமற்போன பிள்ளைகள் பற்றி அரசாங்கத்திடம் உள்ள பழைய அறிக்கைகளை வெளியிடுவது, ஒரு நல்ல தொடக்கமாக அமையும்.

வடமாகாண முதலமைச்சர் கூறுவது போன்று உண்மையிலே ஒரு சுதந்திரமான, பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்றிலே சர்வதேச சமூகம் பங்கு கொள்ளும்போதுதான் மனித உரிமை அத்து மீறல்கள்  காணாமற் போனோர், இறந்தோர் பற்றிய உண்மையான நீதியை வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும் எனபதுதான் நியாயமானதாக அமையும்.

இப்பொறுப்புக்கூறும் படிமுறையை அமைக்கும் போது சர்வதேச ரீதியில் மதிக்கக்கூடிய நீதியாளர்களை அனுமதிக்கின்ற செயலே பயனுள்ள நல்லிணக்கம் ஏற்படுத்தவும் உண்மையான மாற்றத்தை நிகழ்த்தவும் அமைதியினைக் கொண்டுவரவும்; வல்ல நம்பிக்கையினை அளிப்பதாக அமையும்.

பொருளாதார சமூக முதலீட்டிற்கான ஒரு திட்டம் இப்பிரதேசத்திற்குப் பெருமளவில் தேவைப்படுவதாக உள்ளது. உலகிலுள்ள பெரும்பாலான இடங்கள் போன்று முன்னேறுவதற்கான வழிகளையும் வேலை வாய்ப்புகளையும் தமிழர்கள் அடைவது என்பது தமிழ் மக்களுக்கான சமூக நீதியை அவர்கள் அடைவதற்கும் வழி வகுக்கும்.

இதற்குரிய தொடக்கத்திற்கான முனைப்பு கூடுதலாகச் சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்தே வரவேண்டும். இருந்தும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் ரொறொன்ரொ நகரத்திற்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் நாம் கையெழுதிட்டுள்ளோம் என்பதனை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இதன் மூலம் கல்வியிற் தொடங்கி பொருளாதார அபிவிருத்தி போன்ற எல்லா விடயங்களிலும் ஒருமித்துச் செயற்பட முடியும்.

இந்த உடன்படிக்கை போரின்போது அழிக்கப்பட்ட சரித்திர ரீதியான நூலகத்திற்கு உதவுவதையும் உள்ளிட்டதாக அமையும். இப்புரிந்துணர்வு அறிக்கையின் அடிப்படையில் நல்லெண்ணத்தினையும் கூட்டு ஒத்துழைப்பினையும் வெளிக்காட்டும் ஒரு அடையாளக் குறியீடாக ரொறொன்ரொ பொது நூலகத்திலிருந்து சில புத்தகங்களை எடுத்துச் சென்று யாழ். பொது நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்துள்ளோம்.

சிறிலங்காவின் வடபகுதிக்கு பயணம் செய்த அனுபவம் என்பது மாறுபட்டதாக இருந்தது.

மனக்கலக்கத்தை அனுபவித்த மக்களைச் சந்தித்ததன் மூலம் எமது மனம் நெகிழ்வுற்றது. இம்மக்கள் அரசாங்கத்தினால் இதுவரை போதுமான அளவு நீதியையும் உண்மையான மன ஆறுதலை ஏற்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கையையும் பெறவில்லை. பல வருடங்களாக முன்னைய அரசாங்கங்களால் மறுக்கப்பட்ட சில பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைக்க தற்போதைய அரசாங்கம் குறைந்த அளவில் சில சிறிய படிகளை எடுத்திருப்பதன் மூலம் ஒரு நம்பிக்கைக்கான அறிகுறி தென்படுகின்றது.

தற்போதுள்ள சவால் என்பது அடுத்த கட்டமாக பெரிய படிகளை அரசாங்கம் எடுப்பது என்பதாகும். காணாமற்போன பிள்ளைகள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் தேவையும் உரிமையும் இத்தாய்மாருக்கு இருப்பதால் அதனை அவர்களுக்கு வழங்க வேண்டும். அளவுக்கதிமான இராணுவப் பிரசன்னத்தைக் குறைக்க வேண்டும்.

காணிச் சொந்தக்காரர்களிடம் பெருமளவிலான காணியைத் திரும்பவும் கொடுத்தல்  சர்வதேச பங்களார்களின் ஈடுபாட்டுடன் என்ன நடைபெற்றது என்பதனை அறிந்து கொள்ள ஒரு பொறுப்புக்கூறும் படிமுறையை அமைத்தல்  இப்பிரதேசத்தினதும் தமிழ் மக்களிற்கும் நம்பிக்கை உணர்வினையும் சந்தர்ப்பத்தினையும் பெற்றுக்கொள்ளவும் உதவி செய்யும் பொருட்டு ஒரு உண்மையான திட்டத்தினை உருவாக்குதல் போன்றவற்றை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

இங்கே ரொறொன்ரோவில் உள்ள சமூகத்துடன் இணைந்து இவ்விடயங்கள் சாத்தியமாகும் பொருட்டு பணியாற்றுவதற்காக நான் காத்திருக்கின்றேன்.

உங்கள் வீசா நிராகரிக்கப்படுவதற்கான காரணம் என்ன?

பிரான்ஸ் நாட்டிற்கு புதிதாக வருபவர்கள் மொழி பிரச்சனை காரணமாக அகதி அந்தஸ்துக்கு எப்படி விண்ணபம் செய்வது என்று தெரியாமல் இப்படி பட்ட முட்டாள்களை நம்பி ஏமாந்து போனவர்கள் பலர் இதனால் தங்களது வாழ்கையை இழந்தவர்கள் பலர் இந்த உண்மை சம்பவத்தை அருமையாக தொகுத்து காணொளியாக வந்துள்ளது.