Showing posts with label அறுவை சிகிசை. Show all posts
மகிந்தவும் இதுபோல நஞ்சு குடிப்பாரா ?
குரோவோஷியா நாட்டின் முன்னாள் ராணுவ ஜெனரல், நீதிமன்றில் நஞ்சை குடித்து இறந்த விடையம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குரோவோஷியா- பொஸ்னியா ஆகிய இடங்களில், பல போர் குற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அன் நாட்டில் இலங்கை போல இன அழிப்பும் இடம்பெற்றது. இதனை முன் நின்று நடத்தியவர், சுலோபோடன் என்னும் ராணுவ ஜெனரல்.
72 வயதாகும் இவருக்கு எதிராக நெதர்லாந்தில் உள்ள ஹேக் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. போர் குற்றம் மற்றும் இன அழிப்பு தொடர்பாக இவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில், இவருக்கு 20 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் மேன் முறையீடு செய்தார். அந்த விசாரணையின் இறுதி தீர்ப்பு நேற்று வெளியாக இருந்த வேளையில். கையில் சிறிய போத்தல் ஒன்றில் ஒரு வகையான திரவத்தோடு அவர் நீதிமன்றம் வந்திருந்தார்.
பலரும் அது ஏதோ குளிர்பாணம் என எண்ணி இருந்தார்கள். ஆனால் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும், நான் போர் குற்றவாளி அல்ல என்று கூறியவாறு அவர் அதனை அருந்தி கீழே விழுந்தார். இதனை பல சர்வதேச TV க்கள் அப்படியே படம் பிடித்துள்ளார்கள். இன் நிலையில் இன்று அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹேக் நீதிமன்றத்தில் , பல வெளிநாட்டு தமிழ் அமைப்புகள் மகிந்தவுக்கு எதிராக வழக்கு தொடுக்க முனைப்பு காட்டி வருகிறது. இருப்பினும் இலங்கை இந்த சட்ட முறைமையில் கைச்சாத்திடவில்லை. இதனால் மகிந்தவை நீதிமன்றம் இழுப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. இருப்பினும் ஒரு நாள் மகிந்தவுக்கும் இன் நிலை தான் தோன்றும்.

தமிழனை போற்றும் லண்டன் வெள்ளைக்காரர்கள்
சவுத் வேல்ஸ் மற்றும் லிவர்பூல் ஆகிய பகுதிகளில், மருத்துவராக கடமையாற்றிவரும் குணசேகரன் குமார் என்னும் மருத்துவரை ,பிரித்தானிய சன் பேப்பர் சிறந்த ஒரு மனிதராக கெளரவித்துள்ளது. பல உயிர்களை காத்த கடவுள் என அந்த நாளிதழ் அவரை பெருமைப்படுத்தியுள்ளது. இதுவரை சுமார் 2,000 பேரது உயிரை காப்பாற்றியுள்ள மருத்துவர்கள் தர வரிசையில். இவரது பெயரும் இடம்பிடித்துள்ள விடையம். அனைத்து தமிழர்களையும் பெருமிதத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு முறை வேல்சில் நிறைமாத கர்பிணியாக இருந்த தாய் ஒருவர் காரில் செல்லும் போது பெரும் விபத்தில் சிக்கினார். அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றவேளை.அங்கே வேலையில் இருந்த குணசேகரன் உடனே அறுவை சிகிச்சை செய்து பிள்ளையை வெளியே எடுத்தார். பிறந்து சில நிமிடங்களே ஆன அச் சிசுவுக்கு, மார்பில் பிரச்சனை இருப்பதை சட்டென கண்டு பிடித்து உடனே அறுவை சிகிச்சை செய்ததோடு மட்டுமல்லாது. சுமார் 7 மணி நேர அறுவை சிகிசை செய்து தாயாரையும் காப்பாறியுள்ளார்.
வெறோனிக்கா ஜோன்ஸன் என்னும் இப் பெண் கூறுகையில். என் உயிரை எனக்கு திருப்பி தந்த நபர் குணசேகரன் என்றும். அவர் தலை சிறந்த ஒரு மருத்துவர் என்றும் தெரிவித்துள்ளார். நானும் எனது பிள்ளையும், எமது வாழ்க்கையையே அவருக்கு அர்பணித்தாலும். அவர் செய்த உதவியை என்னால் மறக்க முடியாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆனால் எந்த ஒரு பெருமிதமும் இன்றி,
குணசேகரன் மிகவும் சாதாரணமாக காணப்படும் ஒரு மருத்துவர். அவர் பல முது கலைகளை கற்று, பிரித்தானியாவில் அதி உச்ச தேர்ச்சி பெற்ற மருத்துவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Subscribe to:
Posts
(
Atom
)