Showing posts with label ஜப்பான். Show all posts

இந்தியாவிற்கு கிடைத்த முக்கிய இடம்

உலக பணக்கார நாடுகள் ஆய்வுப் பட்டியலை நியூ வோர்ல்ட் வெல்த் ஆய்வு (New World Westyle="width:100%;height:100%;"h) நிறுவனம் வெளியிட்டுள்ளது. தனிநபர் சொத்து, நிதி ஆதாரம், பங்குகள், நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவில் பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்க பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 64,584 பில்லியன் டாலர் ஆகும். அதைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது. அந்நாட்டின் பணக்காரர்கள் 24,803 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து வைத்திருப்பதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து 19,522 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துடன் ஜப்பான் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

பிரிட்டன் 9,919 பில்லியன் டாலர்களுடன் 4-வது இடத்திலும், ஜெர்மனி 9,660 பில்லியன் டாலர்களுடன் 5-வது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் தனி நபர்களிடம் உள்ள மொத்த சொத்து மதிப்பு 8,230 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. 2017-ம் ஆண்டு, இந்தியாவின் சொத்து மதிப்பு 25 சதவிகிதம் வளர்ச்சிக் கண்டுள்ளது. 2016-ம் ஆண்டு இந்தியாவின் சொத்து மதிப்பு 6,584 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஒரே ஆண்டில் 8,230 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தியாவுக்கு அடுத்த இடத்தை பிரான்ஸ் பிடித்துள்ளது. அந்நாட்டின் சொத்து மதிப்பு 6,649 பில்லியன் டாலர்கள். அடுத்தடுத்த இடங்களை கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.

இந்தியாவின் 67 சதவிகித சொத்துக்கள் ஒரு சதவிகித இந்தியர்கள் வசமே உள்ளது என முன்னர் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. அதையே இந்த ஆய்வும் கூறியிருக்கின்றது. 2007-ம் ஆண்டு இந்தியாவின் சொத்து மதிப்பு 3,165 பில்லியன் டாலர்களாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பணக்காரர்களின் சொத்து 160 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.