Showing posts with label தமிழ்த் தேசியத்திற்கு. Show all posts
தமிழர் தரப்பில் உறுதியான தலைமை உருவாவதை இந்தியாவும் இலங்கை அரசும் விரும்பவில்லை
தமிழ் மக்களுக்கிடையே நேர் மையான, விட்டுக்கொடுப்பற்ற, கொள்கையிலிருந்து விலகாத தலைமை உருவாவதை இலங்கை அரசும் இந்தியாவும் மேற்குலக மும் விரும்பவில்லை.
அதனால் தான் தமிழ் மக்களுக்கு விரோதமான கட்சிகளை பலப் படுத்துவதாக சாடியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலை வர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், உள்@ராட்சி தேர்தலை எதிர் கொள்ளும் தமது கூட்டணி
யில் 80 வீதத்துக்கும் அதிகமான வேட்பாளர் கள் பொது அமைப்புக்களை சார்ந்தோரே எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்றைய தினம் பிற்பகல் இரண்டு மணியளவில் நடைபெற்ற பத்திரி கையாளர் சந்திப்பின் போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஈ.பி.ஆர். எல்.எவ் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இடையே உள்@ராட்சி தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஒரு புரிந்து ணர்வு கடந்த நவம்பர் மாதமே எட்டப்பட்டிரு ந்தது. இந்த தேர்தல் வெறுமனே ஒரு அபி விருத்தியை பிரதானமாக கொண்டிராமல், புதிதாக கொண்டுவரப்படவுள்ள ஒற்றையா ட்சி அரசியலமைப்பிற்கு மக்களிடையே ஆத ரவு உள்ளதா? மக்கள் யாருடைய பக்கம் உள்ளார்கள் என்பதை நாடி பிடிக்கும் தேர்த லாகவே இது உள்ளது.
அதன் அடிப்படையிலேயே இந்த தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்ற இணக்கப் பாட்டை எட்டியிருந்தோம். இதேபோன்று தமிழ் மக்கள் பேரவையின் மத்தியஸ்தத்தில் இரு கட்சிகளுமே இணைந்து தேர்தலை எதிர்கொள்ளுவது என தீர்மானிக்கப்பட்டிரு ந்தது. இந்த சந்திப்பு நவம்பர் 12ஆம் திகதி நடைபெற்றிருந்தது. எனினும் கடந்த 27 ஆம் திகதி முதல் ஈ.பி.ஆர்.எல்.எவ் எம்மு டன் தொடர்பு கொள்ளவில்லை. சுரேஷ் பிரே மச்சந்திரன் டில்லி சென்று வந்த பின்னர் உதயசூரியன் சின்னத்தில் தமிழர் விடு தலை கூட்டணியோடு சேர்ந்து தான் தேர் தலை எதிர்கொள்ள வேண்டும் என எம்மி டம் கூறினார்.
எனினும் அதற்கு நாம் மறுப்பு தெரி வித்துவிட்டோம். பேரவையோடு மற்றும் எங்களோடு எட்டப்பட்ட முடிவுக்கு மாறாக இது அமைந்திருந்தது. எனினும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தவறான நிலைப்பாடு களை மக்களுக்கு தெரியப்படுத்துவதோடு, தமிழர் விடுதலை கூட்டணியின் பிழையான நிலைப்பாடுகளையும் மக்களுக்கு தெரியப் படுத்துவோம் என கூறியிருந்தோம். எனி னும் தனது சுய விருப்பின் அடிப்படையில் உதயசூரியனில் போட்டியிடவில்லை என கூறிய சுரேஷ், கிழக்கு மாகாண உறுப்பின ர்களை அழுத்தத்தினால் தான் உதயசூரிய னின் கீழ் போட்டியிட முடிவு செய்ததாகவும் எம்மிடம் கூறியிருந்தார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலை மைகள் தேர்தலுக்காக என்றாலும் சமஷ்டி, வடகிழக்கு இணைப்பு என பேசி வருகின்ற னர். ஆனால் தமிழர் விடுதலை கூட்டணி யின் தலைவர் ஆனந்தசங்கரி சமஷ்டியை யும், வடகிழக்கு இணைப்பையும் ஏற்க வில்லை. மாறாக 13ஆம் திருத்த சட்டத்தையே அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பை விட மோசமான கொள்கையை கொண்டுள்ள தமிழர் விடுதலை கூட்டணி யுடன் எவ்வாறு இணைந்து தேர்தலை எதிர்கொள்ளுவது? அதேபோன்று இன் னொரு கட்சியின் சின்னத்தின் கீழ் போட்டி யிடுவதும் தமிழரசு கட்சியின் சர்வாதிகார த்தையே அங்கும் தோற்றுவிக்கும்.
தமிழர் தரப்பில் நியாயமான, கொள்கை உறுதியுடைய தலைமை உருவாவதை இந்தியாவும், மேற்குலகும், இலங்கை அர சும் விரும்பவில்லை. அதனால் தான் சுரேஷ் பிரேமச்சந்திரனை ஏமாற்றி தமது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு சென்றுள்ளனர். எனி னும் சுரேஷ் மீது எமக்கு மதிப்பு உண்டு என் பதால் தான் அவருடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள சம்மதம் தெரிவித்திருந்தோம். எனினும் அவர் எம்மை இறுதியில் ஏமாற்றி யுள்ளார்.
மேலும் எமது தமிழ்த்தேசிய பேரவை சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாள ர்களில் 80 வீதமானோர் பொது அமைப்புக் களை சார்ந்தோரே, எம்மோடு சேர்ந்து செய ற்பட விரும்புவர்கள் இணைந்து கொள்ள முடி யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி,
வலம்புரி

தமிழ்த் தேசியத்திற்கு பேரிழப்பு ஓவியர் சந்தானம் அவர்களின் மறைவு
தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர், தூரிகையாளர், மாந்தநேயமிக்கவர் என பன்முகங்களைக் கொண்ட ஓவியர் வீரசந்தானம் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவரின் மறைவுக்கு தமிழ் உணர்வாளர்களும், அரசியல்கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஓவியர் வீரசந்தானம் அவர்களின் மறைவிற்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் "ஓவியர் வீரசந்தானம் அவர்கள் நேற்று மாலை (13-07-2017)திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு காலமானார் என்னும் தகவல் பெரும் அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் அளிக்கிறது. அவர் நாடுபோற்றும் தலைசிறந்த ஓவியப் படைப்பாளர். கண்ணைக் கவரும் கலைநயம் சிந்தும் கருத்தாழம் மிக்க கோட்டோவிங்களைப் படைப்பதில் வல்லவர். அவர் ஒரு ஓவியக் கலைஞராக மட்டுமின்றி, அதிதீவிரமான தமிழ்த்தேசிய உணர்வாளராக, துணிவாகக் களமிறங்கிச் செயலாற்றும் போராளியாக விளங்கியவர். தமிழுக்காகவும் தமிழினத்துக்காகவும் உரத்துக் குரலெழுப்பியவர். தமிழ்நாட்டுக்காகவும் தமிழீழத்துக்காகவும் சமரசமின்றி ஓயாது போராடியவர். விடுதலைப்புலிகளை ஆதரிப்பதில் மிகவும் உறுதியாக இருந்தவர். இந்திய அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகளைக் கடுமையாகச் சாடியவர். தமிழ்நாட்டை தனிநாடாக வென்றெடுக்க வேண்டுமென்னும் கருத்தை ஓங்கி முழங்கியவர். தமிழ்த்தேசியப் போராட்டக் களத்தில் எப்போதும் முன்னணியில் நின்றவர். உலகத்தமிழர்களின் நம்பிக்கைக்குரியவர். விடுதலைச்சிறுத்தைகள் முன்னெடுத்த "தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின்" அனைத்துப் போராட்டக் களங்களிலும் மிகவும் தீவிரமாகப் பங்கேற்றவர். சிங்கள இனவெறியர்கள் நடத்திய இனப்படுகொலையின் பேரவலத்தைச் சித்தரிக்கும் 'முள்ளிவாய்க்கால் முற்றம்' என்னும் நினைவிடத்தை அமைப்பதில் பெரும் பங்காற்றியவர். அவருடைய இழப்பு தமிழ்த்தேசியக் களத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்." என குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Posts
(
Atom
)