Showing posts with label தீவிரவாதிகள். Show all posts
மீண்டும் தலை தூக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்?
ஈராக்கின் பல பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்து அட்டூழியம் செய்து வந்த ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் ஒழிக்கப்பட்டு விட்டதாக கடந்த ஆண்டு இறுதியில் ஈராக் அறிவித்தது. இந்நிலையில், கிர்குக் பகுதியில் ஈராக்கிய அரசுப்படையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அல்-சாத்வுன்யா பகுதியில் திடீரென ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி சரமாரி தாக்குதல்களை நடத்தினர். சில மணிநேரங்கள் நீடித்த இந்த துப்பாக்கிச்சண்டையில் 27 ஈராக் வீரர்கள் பலியானதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலை தங்களது இயக்கத்தினர் நடத்தியதாக ஐ.எஸ் இயத்தின் ஊடகமான அமாக் செய்தி வெளியிட்டுள்ளது.

இரட்டை குண்டு வெடிப்பு: தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 16 பேர் பலி
ஈராக் தலைநகரான பக்தாத்திலுள்ள ரைய்ரன் சதுக்கத்தில் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ள இரட்டை தற்கொலைத் தாக்குதலில் இது வரை சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், 65 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உட்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இடிபாடுகளிலிருந்து சடலங்களை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமெனவும் அவ்வமைச்சு கூறியுள்ளது.
மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்பட்டுள்ள இடத்திலேயே இந்த இரட்டை தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கட்டுமானத் தொழிலாளர்களே அவ்விடத்தில் அதிகளவில் கூடியிருந்ததாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Subscribe to:
Posts
(
Atom
)