Showing posts with label நியூயோர்க. Show all posts

அமெரிக்காவில் குண்டு வெடிப்பு

சற்று முன்னர் அமெரிக்க நியூயோர்க நகரில் உள்ள , அண்டகிரவுன் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்துள்ளது. பிளாஸ்டிக் பைப்பில் செய்யப்பட்ட குண்டு வெடித்ததில் பலர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. நியூயோர்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுரங்கத்திற்கு அருகே உள்ள மிக முக்கியமான தொடரூந்து நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்கே தினம் தோறும் சுமார் 2 லட்சம் பயணிகள் சென்றுவருவது வழக்கம் என்கிறார்கள்.

இக் குண்டு வெடித்து சிறிது நேரத்தில், மேலும் ஒரு சிறிய குண்டு வயர்களோடு சென்ற ஒரு பங்களாதேஷ் நபர் ஒருவரை பொலிசார் அதிரடியாக கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன் நபரே முதல் குண்டை வெடிக்க வைத்துவிட்டு. மற்றுமொரு குண்டை வேறு ஒரு இடத்தில் வெடிக்கவைக்க எடுத்துச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்கிறார்கள் பொலிசார்.

அமெரிக்காவின் மிக முக்கிய பாதுகாப்பான நகரங்களில் நியூயோர்க்கும் ஒன்றாகும். அங்கே குண்டு வெடித்துள்ளமை பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.