Showing posts with label வடகொரியா. Show all posts

அமெரிக்காவின் முழு நிலப்பரப்பும், தனது ஏவுகணை இலக்கில் வந்துள்ளது - வடகொரியா

வடகொரியா இன்று பாலிஸ்டிக் வகை ஏவுகணை ஒன்றை சோதனை மேற்கொண்டுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன, அதையும் மீறி நாங்கள் எங்கள் சோதனையை விடமாட்டோம் என்று வடகொரியா தெரிவித்திருந்தது.

உலகநாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து தனது சோதனையை மேற்கொண்டு வந்தது. இதையடுத்து சுமார் இரண்டு மாத காலமாக சோதனை மேற்கொள்ளாமல் இருந்த வடகொரியா, எந்த நேரத்திலும் ஏவுகணை சோதனையை மேற்கொள்ளலாம் என்று தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் வடகொரியா இன்று உள்ளூர் நேரப்படி காலை 3.30 மணி அளவில் கண்டம் விட்டு கண்டம் பாயும்  ஏவுகணை சோதனை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

அது கிழக்கு நோக்கி பறந்ததாகவும், ஆனால் அது முழுமையாக எந்த வகையில் தயார் செய்யப்பட்டது, எவ்வளவு தூரம் சென்றது என்பது குறித்து தென்கொரியா மற்றும் அமெரிக்கா ஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வடகொரியா இந்த ஆண்டு பல ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. அதுமட்டுமின்றி அடுத்தாண்டு அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை ஒன்றை வடகொரியா தயார் செய்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.

அணுசக்தி பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்த பின்னர் வடகொரியா ஒரு அணுசக்தி நாடாக அதன் இலக்கை அடைந்து உள்ளது. தற்போது அமெரிக்காவின் முழு நிலப்பரப்பும் தனது ஏவுகணை இலக்கில் வந்துள்ளது.

பெருமையுடன் பிரகடனம் செய்கிறோம் இறுதியாக வடகொரியா  அணுசக்தியை நிறைவு செய்யும் பெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்தி உள்ளது என வடகொரியா கூறி உள்ளது.

வடகொரியா மீது புதிய பொருளாதார தடை

உலக நாடுகளின் கண்டனம், ஐ.நா. சபையின் பொருளாதார தடைகள் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதேசமயம், அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் பொருளாதார தடை விதிக்கப்பட்டதால் வடகொரியாவுக்கு கடும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

புதிய பொருளாதார தடைக்கு அமெரிக்கா உரிய விலையை கொடுக்க நேரிடும் என வடகொரியா எச்சரித்தது. போர் தொடுத்தால் அமெரிக்காவை ஏவுகணைகளால் தகர்ப்பதாகவும் மிரட்டியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று அமெரிக்காவில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், வடகொரியா தீவிரவாதத்தை ஆதரித்து வருவதாக கூறினார். தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்து வரும் நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ள ஈரான், சூடான், சிரியா போன்ற நாடுகளின் பட்டியலில் வடகொரியாவும் இணைகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இதன்மூலம் வடகொரியா மீதான கெடுபிடிகள் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. வடகொரியாவுடன் பல கோடி ரூபாய்க்கு வர்த்தக தொடர்பு வைத்துள்ள ஒரு தொழிலதிபர், 13 நிறுவனங்கள் மற்றும் 20 கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வடகொரியாவின் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை திட்டங்களுக்கான நிதி ஆதாரத்தை தடுத்து அந்நாட்டை தனிமைப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த புதிய தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா மற்றும் அந்த நாட்டுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது கூடுதல் அபராதம் மற்றும் தடை விதிக்கப்படும் என்று நிதித்துறை மந்திரி ஸ்டீவன் முனுசின்